TNPSC Thervupettagam
January 30 , 2018 2490 days 910 0
  • தேசிய விமானவியல் ஆய்வகத்தால் (National Aeronautics Laboratory - NAL) முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட SARAS PT1N என்ற பயணிகள் விமானம் முதல் முறையாக பெங்களூருவில் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
  • இந்த விமானம் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட SARAS ரக விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வகையாகும்.
  • SARAS PT1N ஆனது 14 பேர் வரை பயணிக்கக் கூடிய சிறிய விமானம் ஆகும்.
  • இந்த விமானத்தை வடிவமைத்து உருவாக்கியது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய விமானவியல் ஆய்வகம் [Council of Scientific & Industrial Research - National Aeronautics Laboratory (CSIR – NAL)] ஆகும்.
  • இந்தியாவில் காணப்படும் சாரஸ் (Sarus/Saras) வகை நாரைகளின் பெயரில் இந்த விமானத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • 1990ஆம் ஆண்டுகளில் குறுகிய தூர விமானப் போக்குவரத்தினைக் கருத்தில் கொண்டு இந்த விமானம் திட்டமிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்