தேசிய விமானவியல் ஆய்வகத்தால் (National Aeronautics Laboratory - NAL) முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட SARAS PT1N என்ற பயணிகள் விமானம் முதல் முறையாக பெங்களூருவில் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த விமானம் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட SARAS ரக விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வகையாகும்.
SARAS PT1N ஆனது 14 பேர் வரை பயணிக்கக் கூடிய சிறிய விமானம் ஆகும்.
இந்த விமானத்தை வடிவமைத்து உருவாக்கியது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய விமானவியல் ஆய்வகம் [Council of Scientific & Industrial Research - National Aeronautics Laboratory (CSIR – NAL)] ஆகும்.
இந்தியாவில் காணப்படும் சாரஸ் (Sarus/Saras) வகை நாரைகளின் பெயரில் இந்த விமானத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டுகளில் குறுகிய தூர விமானப் போக்குவரத்தினைக் கருத்தில் கொண்டு இந்த விமானம் திட்டமிடப்பட்டது.