புவி அறிவியல் துறை அமைச்சகம் ஆனது தேடல் மற்றும் மீட்பு உதவிக் கருவியின் (SARAT) சமீபத்திய இரண்டாம் பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியத் தேடல் மற்றும் மீட்பு நிறுவனங்களுக்கு மேம்படுத்தப்பட்ட செயல்திறன், விரைவான எதிர் நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசம் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அதிக வெற்றி விகிதங்களை வழங்குகிறது.
இது கடலில் மிகவும் தொலைதூர அல்லது அதிக ஆபத்துள்ளப் பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இடர் எச்சரிக்கை அமைப்பாகும்.