TNPSC Thervupettagam
October 27 , 2024 34 days 62 0
  • கலப்பு வகைக் கட்டுப்பாடுகள் கொண்ட மற்றும் நுண்ணறிவு (SARTHI) அமைப்புடன் கூடிய சூரிய உதவியில் இயங்கும் குளிர்பதனக் கொள்கலன் போக்குவரத்து அமைப்பு ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது குண்ட்லியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தினால் (NIFTEM-K) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருட்களின் போக்குவரத்தில், அறுவடைக்குப் பின்னதாக ஏற்படும் இழப்புகளைக் குறைக்க இது மிகவும் ஒரு புதுமையான தீர்வாக அமையும்.
  • இது பழங்கள் மற்றும் காய்கறிகளை அவற்றின் தனிப்பட்ட சேமிப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெவ்வேறு வெப்ப நிலையில் சேமிப்பதற்காக என்று நன்கு வடிவமைக்கப் பட்ட இரட்டை பெட்டிகளைக் கொண்டுள்ளது.
  • இந்த வடிவமைப்பு ஆனது, உணவுப் பொருட்களின் சேமிப்புக் காலத்தினை நீட்டிக்க உதவுகிறது என்பதோடு குளிரால் ஏற்படும் அழுகல் அல்லது ஈரப்பதம் இழப்பினால் ஏற்படும் இழப்புகளையும் இது குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்