கலப்பு வகைக் கட்டுப்பாடுகள் கொண்ட மற்றும் நுண்ணறிவு (SARTHI) அமைப்புடன் கூடிய சூரிய உதவியில் இயங்கும் குளிர்பதனக் கொள்கலன் போக்குவரத்து அமைப்பு ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது குண்ட்லியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தினால் (NIFTEM-K) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருட்களின் போக்குவரத்தில், அறுவடைக்குப் பின்னதாக ஏற்படும் இழப்புகளைக் குறைக்க இது மிகவும் ஒரு புதுமையான தீர்வாக அமையும்.
இது பழங்கள் மற்றும் காய்கறிகளை அவற்றின் தனிப்பட்ட சேமிப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெவ்வேறு வெப்ப நிலையில் சேமிப்பதற்காக என்று நன்கு வடிவமைக்கப் பட்ட இரட்டை பெட்டிகளைக் கொண்டுள்ளது.
இந்த வடிவமைப்பு ஆனது, உணவுப் பொருட்களின் சேமிப்புக் காலத்தினை நீட்டிக்க உதவுகிறது என்பதோடு குளிரால் ஏற்படும் அழுகல் அல்லது ஈரப்பதம் இழப்பினால் ஏற்படும் இழப்புகளையும் இது குறைக்கிறது.