சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) ஆனது SARTHIE 1.0 என்ற தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது சமூக நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, விழிப்புணர்வில் உள்ள இடைவெளியைக் குறைத்து சட்ட உதவிகளை வழங்கும்.
பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், முதியோர்கள், திருநர்கள், குடிப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நலிவடைந்த சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1987 ஆம் ஆண்டின் சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் NALSA உருவாக்கப் பட்டது.
நலிவடைந்த குழுக்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்கும் சட்டம் குறித்த தகவல்களை பரப்புவதற்காகவும் இது பணிக்கப் பட்டுள்ளது.