TNPSC Thervupettagam

SARTTAC வழிகாட்டு குழு சந்திப்பு - டெல்லி

November 19 , 2017 2563 days 863 0
  • சர்வதேச பண நிதியத்தின் (International Monetary Fund-IMF) தெற்காசிய பிராந்திய பயிற்சி மற்றும் தொழிற்நுட்ப உதவி மையத்தின் ( South Asia Regional Training and Technical Assistance Centre- SARTTAC) வழிகாட்டுக் குழுவின்(Steering Committee) இடைக்கால சந்திப்பு புதுதில்லியில் நடைபெற்றது.
  • இந்த குழுவானது இம்மையத்தின் 2018-நிதி ஆண்டிற்கான செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், அரசு நிதி மற்றும் பொது கடன் புள்ளி விவரங்கள் போன்ற துறைகளில் இம்மையத்தால் மேற்கொள்ளப்பட்டு  வரும் புதிய பணிகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
  • SARRTTAC அமைப்பானது 2017 பிப்ரவரியில் துவங்கப்பட்டது. இம்மையம் புது தில்லியில் அமைந்துள்ளது.
  • இம்மையமானது அதன் தெற்காசிய   உறுப்பு நாடுகளில் முழுவதும் ஒருங்கிணைந்த பயிற்சிகள் மற்றும் தொழிற்நுட்ப உதவிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் IMF-ன் முதல் பிராந்திய திறன் மேம்பாட்டு மையமாகும்.
  • இந்த மையமானது வங்க தேசம், இந்தியா, பூடான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படும்.
  • இந்த மையத்தின் செயல்பாட்டிற்கான பட்ஜெட்டில், மூன்றில் இரு பங்கினை இந்த 6 உறுப்பு நாடுகளும், கூடுதல் நிதியை ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வழங்கும்.
  • தெற்காசியப் பிராந்தியத்தில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும், உறுப்பு நாடுகள் தங்களுடைய பொருளாதார கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை நவீனப்படுத்த இம்மையம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்