சர்வதேச பண நிதியத்தின் (International Monetary Fund-IMF) தெற்காசிய பிராந்திய பயிற்சி மற்றும் தொழிற்நுட்ப உதவி மையத்தின் ( South Asia Regional Training and Technical Assistance Centre- SARTTAC) வழிகாட்டுக் குழுவின்(Steering Committee) இடைக்கால சந்திப்பு புதுதில்லியில் நடைபெற்றது.
இந்த குழுவானது இம்மையத்தின் 2018-நிதி ஆண்டிற்கான செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், அரசு நிதி மற்றும் பொது கடன் புள்ளி விவரங்கள் போன்ற துறைகளில் இம்மையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பணிகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
SARRTTAC அமைப்பானது 2017 பிப்ரவரியில் துவங்கப்பட்டது. இம்மையம் புது தில்லியில் அமைந்துள்ளது.
இம்மையமானது அதன் தெற்காசிய உறுப்பு நாடுகளில் முழுவதும் ஒருங்கிணைந்த பயிற்சிகள் மற்றும் தொழிற்நுட்ப உதவிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் IMF-ன் முதல் பிராந்திய திறன் மேம்பாட்டு மையமாகும்.
இந்த மையமானது வங்க தேசம், இந்தியா, பூடான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படும்.
இந்த மையத்தின் செயல்பாட்டிற்கான பட்ஜெட்டில், மூன்றில் இரு பங்கினை இந்த 6 உறுப்பு நாடுகளும், கூடுதல் நிதியை ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வழங்கும்.
தெற்காசியப் பிராந்தியத்தில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும், உறுப்பு நாடுகள் தங்களுடைய பொருளாதார கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை நவீனப்படுத்த இம்மையம் உதவும்.