நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பானது தன்னுடைய “கல்வியில் மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நீடித்த செயல்பாட்டுத் திட்டத்திற்கு” (Sustainable Action for Transforming Human Capital in Education -SATH-E) விரிவான திட்ட விளக்க வரைபடம் (comprehensive roadmaps) மற்றும் விளக்கமான கால நேர வரையறைகளை (detailed timelines) வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வியில் அமைப்பு அளவிலான ஆளுமை மாற்றத்தை அறிமுகப்படுத்துவதே (System-Wide Governance Transformation) SATH-E திட்டத்தின் நோக்கமாகும்.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள வரைபடமானது (Roadmaps) 2018 முதல் 2020 வரை செயல்படும். இது பள்ளிக் கல்வியில் அரசின் தெளிவான தலையீடுகளை (detailed interventions) விவரிக்கும்.
பள்ளிக் கல்வியில் “முன் மாதிரி மாநிலங்களாக“ (Role Model States) உருவாக நோக்கம் கொண்டுள்ள மூன்று முக்கிய மாநிலங்களான ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிஸா ஆகியவை இந்த வரையறுக்கப்பட்ட அரசுத் தலையீடுகளை மேற்கொள்ளும்.
SATH-E திட்டத்தின் கூட்டு அறிவாற்றல் பங்கெடுப்பாளர்கள், பாஸ்டன் ஆலோசனைக் குழு (Boston Consulting Group-BCG), கல்வி தலைமைத்துவத்திற்கான பிராமல் அறக்கட்டளை (Piramal Foundation for Education Leadership - PFEL) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கண்ட மூன்று மாநிலங்கள் மற்றும் நிதி ஆயோக் அமைப்பினால் இந்த திட்ட வரைபடமானது கூட்டாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்ட விளக்க வரைபடமானது தனிப்பட்ட அளவில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் அளவில் பள்ளிக் கல்வியின் மேம்பாட்டிற்கு அரசு எடுக்க வேண்டிய தலையீடுகளை (interventions) வரையறுப்பதோடு, தனிப் பயனாக்கப்பட்ட, செயல் சார்ந்த திட்டங்களையும் (customized, action-oriented programmes) அளிக்கின்றது.
மூன்று மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை உள்ளடக்கிய, நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியின் (CEO-Chief Executive Officer) தலைமையில் அமைந்த தேசிய வழிகாட்டுக் குழுவின் (National Steering Group-NSG) வழிகாட்டலின் படி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.