TNPSC Thervupettagam
March 21 , 2018 2314 days 743 0
  • நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பானது தன்னுடைய “கல்வியில் மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நீடித்த செயல்பாட்டுத் திட்டத்திற்கு” (Sustainable Action for Transforming Human Capital in Education -SATH-E)  விரிவான திட்ட  விளக்க வரைபடம் (comprehensive roadmaps) மற்றும் விளக்கமான கால நேர வரையறைகளை (detailed timelines) வெளியிட்டுள்ளது.
  • பள்ளிக் கல்வியில் அமைப்பு அளவிலான ஆளுமை மாற்றத்தை அறிமுகப்படுத்துவதே (System-Wide Governance Transformation) SATH-E திட்டத்தின் நோக்கமாகும்.
  • நிதி ஆயோக் வெளியிட்டுள்ள வரைபடமானது (Roadmaps) 2018 முதல் 2020 வரை செயல்படும். இது பள்ளிக் கல்வியில் அரசின் தெளிவான தலையீடுகளை (detailed interventions) விவரிக்கும்.
  • பள்ளிக் கல்வியில் “முன் மாதிரி மாநிலங்களாக“ (Role Model States) உருவாக நோக்கம் கொண்டுள்ள மூன்று முக்கிய மாநிலங்களான ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிஸா ஆகியவை இந்த வரையறுக்கப்பட்ட அரசுத் தலையீடுகளை மேற்கொள்ளும்.
  • SATH-E திட்டத்தின் கூட்டு அறிவாற்றல் பங்கெடுப்பாளர்கள், பாஸ்டன் ஆலோசனைக் குழு (Boston Consulting Group-BCG), கல்வி தலைமைத்துவத்திற்கான பிராமல் அறக்கட்டளை (Piramal Foundation for Education Leadership - PFEL) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கண்ட மூன்று மாநிலங்கள் மற்றும் நிதி ஆயோக் அமைப்பினால் இந்த திட்ட வரைபடமானது கூட்டாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்ட விளக்க வரைபடமானது தனிப்பட்ட அளவில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் அளவில் பள்ளிக் கல்வியின் மேம்பாட்டிற்கு அரசு எடுக்க வேண்டிய தலையீடுகளை (interventions) வரையறுப்பதோடு, தனிப் பயனாக்கப்பட்ட, செயல் சார்ந்த திட்டங்களையும் (customized, action-oriented programmes) அளிக்கின்றது.
  • மூன்று மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை உள்ளடக்கிய, நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியின் (CEO-Chief Executive Officer) தலைமையில் அமைந்த தேசிய வழிகாட்டுக் குழுவின் (National Steering Group-NSG) வழிகாட்டலின் படி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்