“மேம்படுத்தப்பட்ட சுரங்கத் துறையில் ஆத்ம நிர்பர் பாரதத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யோஜனா” (SATYABHAMA - Science and Technology Yojana for Atma Nirbhar Bharat in Mining Advancement) என்று பெயரிடப்பட்ட தளமானது மத்திய சுரங்க மற்றும் நிலக்கரித் துறை அமைச்சரான பிரகாலத் ஜோஷி என்பவரால் தொடங்கப் பட்டுள்ளது.
இது “என்ஜிஒ தர்பன்” என்ற நிதி ஆயோக்கின் தளத்துடன் ஒருங்கிணைக்கப் படுகின்றது.
இந்தத் தளமானது நாட்டில் கனிம மற்றும் சுரங்கத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கை ஊக்குவிப்பதற்கான தேவையை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தகவல் மையத்தின் சுரங்கத் தகவல் பிரிவானது இந்தத் தளத்தின் மீதான செயல்படுத்து நிறுவனமாகும்.