TNPSC Thervupettagam

சவுதி அரேபியா – இராணுவம்

March 2 , 2018 2332 days 751 0
  • சவுதி அரேபியா அரசு முதன் முறையாக இராணுவத்தில் பெண்கள் சேர அனுமதியளித்துள்ளது.
  • பெண்கள் ரியாத், மெக்கா, அல்-காசிம் மற்றும் மெதினா ஆகிய மண்டலங்களில் படைவீரர்கள் பணிக்காக விண்ணப்பிக்கலாம்.
  • பெண் விண்ணப்பத்தாரர்கள் 25-35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். உயர்நிலைக் கல்வி முடித்தவர்களாகவும், கட்டாய மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • இவர்கள் போர்/சண்டையின் போது ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அதேசமயம், பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
  • சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானால் தொடங்கி வைக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டம் 2030ன் கீழ் இந்த வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்