தெற்காசிய வனவிலங்கு அமலாக்கக் குழுவின் (SAWEN) நான்காவது கூட்டம், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. இது அரசுகளுக்கிடையேயான வனவிலங்கு சட்டத்தை அமலாக்கம் செய்யும் அமைப்பு ஆகும்.
2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் முதல் கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இரண்டு நாள் நடைபெற்ற இம்மாநாட்டில், ஏழுநாடுகளின் (பாகிஸ்தானைத் தவிர) பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்வமைப்பு எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இவ்வமைப்பானது, சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தின் மீதான தெற்காசிய வல்லுநர்கள் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பூடான் நாட்டின் பாரோ நகரில் 2011 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.
இவ்வமைப்பின் செயலகம் நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ளது. இதன் மண்டலக்குழு எட்டு தெற்காசிய நாடுகளைக் கொண்டது.