TNPSC Thervupettagam

SBI சேமிப்பு வங்கிக் கணக்குகளிள் குறைந்தபட்ச இருப்புத் தொகை நீக்கம்

March 12 , 2020 1723 days 586 0
  • சேமிப்புக் கணக்குகளுக்கான சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கியுள்ளதாக இந்திய பாரத வங்கி (State Bank of India - SBI) அறிவித்துள்ளது.
  • தற்போது பெரு நகரங்கள், நகர்ப்புறப் பகுதிகள் (நகரை ஒட்டிய பகுதிகள்) மற்றும் கிராமப் புறங்களில் SBI சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் முறையே ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் ரூ. 1,000 என்ற  இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டும்.
  • மேலும் இந்த வங்கியானது சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்குமான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் சீரமைத்துள்ளது.
  • முன்னதாக, ஒரு லட்சத்துக்கும் குறைவான இருப்புத் தொகையைக் கொண்ட சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3.25 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்புத் தொகையைக் கொண்ட சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 3 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெற்று வந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்