சொந்த வீடு வாங்குவோருக்கு, நாடு முழுவதும் 3,000 அங்கீகரிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களில் இருந்து வீடுகளைத் தேர்வு செய்ய உதவியாக "எஸ்.பி.ஐ ரியால்ட்டி" என்ற பிரத்யேக இணையதள வாயிலை இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது.
'எஸ்.பி.ஐ ரியால்ட்டி இணையதளம் , 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 30 நகரங்களில் பாரத ஸ்டேட் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 3000 அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் இருந்து தங்கள் கனவு இல்லத்தை தேர்ந்தெடுக்க உதவும் .
இந்த இணையதளத்தை எஸ்.பி.ஐ.கேப் செக்யூரிட்டிஸ் (SBICAP Securities) மற்றும் ப்ராப் ஈக்விட்டி (PropEquity) ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளன.
தற்போது விற்பனைக்குத் தயாராக இருக்கும்5 லட்சம் வீடுகளின் பட்டியல் இந்த இணையதளத்தில் உள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்களுக்கான தற்போதைய மற்றும் கடந்த கால விலைவாசியை வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
வாடிக்கையாளரின் வருமான அடிப்படையில், வங்கியில் எவ்வளவு வீட்டுக் கடன் பெறலாம் என்று கணக்கிட இந்த இணையதளம் உதவும் .