பாரத் ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறையானது (ERD) “2024 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான முன்னோடி அறிக்கை: வேகமாக மாறிவரும் தேசத்தின் நுணுக்கங்கள்” என்ற ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவின் சராசரி வருடாந்திர அதிவேக வளர்ச்சியானது 1971 ஆம் ஆண்டில் இருந்த 2.20 சதவீதம் என்ற அளவிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 1 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மக்கள்தொகையானது 2024 ஆம் ஆண்டில் 138-142 கோடி என்ற வரம்பில் இருக்கும்.
2021 ஆம் ஆண்டில் 24 வயதாக இருந்த இந்தியாவின் சராசரி வயது ஆனது 2023/24 ஆம் ஆண்டில் 28-29 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உழைக்கும் வயதில் இருக்கும் (தொழிலாளர் வளம்) மக்கள் தொகையானது (15-59) 2031 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 65.2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
2011-2024 ஆம் ஆண்டுகளில் 4.6 கோடி வளர்ச்சியுடன் முதியோர்களின் எண்ணிக்கை என்பது 15 கோடியைத் தாண்டும் (பெண்கள்: 7.7 கோடி; ஆண்கள்: 7.3 கோடி).
தென் மாநிலங்கள், முக்கியமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் அதிகரித்து வரும் மக்கள்தொகை வளர்ச்சிப் போக்கில் சரிவு ஏற்படும் (2011ஆம் ஆண்டினை விட).
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் முன்னணி இடம் பெற்றதுடன் வட மாநிலங்கள் (மக்கள் தொகை அதிகரிப்பு வளர்ச்சிப் போக்கில் 33 சதவீத பங்கைக் கொண்டுள்ளன) மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்கின்றன.
வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்கள் மொத்த மக்கள்தொகையில் 52 சதவீதப் பங்கைக் கொண்டிருக்கும் (2011 ஆம் ஆண்டில் 51 சதவீதம்).
ஒன்றியப் பிரதேசங்களைத் தவிர, கோவா மற்றும் கேரளா ஆகியவை அதிக அளவில் நகர மயமாக்கப் பட்டுள்ளன.
பெரிய மாநிலங்களில், 54 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதுடன் தமிழ்நாடு அதிகளவில் நகரமயமாக்கப்பட்ட ஒரு மாநிலமாகத் தொடர்கிறது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (48.8 சதவீதம்) உள்ளது.
இமாச்சலப் பிரதேசம் (10.3 சதவீதம்), அதைத் தொடர்ந்து பீகார் (12.4 சதவீதம்), அஸ்ஸாம் (15.7 சதவீதம்), மற்றும் ஒரிசா (19.0%) ஆகியவை இந்தத் தரவரிசையில் கீழ் மட்டங்களில் உள்ளன.