TNPSC Thervupettagam

SBI ERD அறிக்கை 2024

October 4 , 2024 20 hrs 0 min 48 0
  • பாரத் ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறையானது (ERD) “2024 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான முன்னோடி அறிக்கை: வேகமாக மாறிவரும் தேசத்தின் நுணுக்கங்கள்” என்ற ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்தியாவின் சராசரி வருடாந்திர அதிவேக வளர்ச்சியானது 1971 ஆம் ஆண்டில் இருந்த 2.20 சதவீதம் என்ற அளவிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 1 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேசிய மக்கள்தொகையானது 2024 ஆம் ஆண்டில் 138-142 கோடி என்ற வரம்பில் இருக்கும்.
  • 2021 ஆம் ஆண்டில் 24 வயதாக இருந்த இந்தியாவின் சராசரி வயது ஆனது 2023/24 ஆம் ஆண்டில் 28-29 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உழைக்கும் வயதில் இருக்கும் (தொழிலாளர் வளம்) மக்கள் தொகையானது (15-59) 2031 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 65.2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • 2011-2024 ஆம் ஆண்டுகளில் 4.6 கோடி வளர்ச்சியுடன் முதியோர்களின் எண்ணிக்கை என்பது 15 கோடியைத் தாண்டும் (பெண்கள்: 7.7 கோடி; ஆண்கள்: 7.3 கோடி).
  • தென் மாநிலங்கள், முக்கியமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் அதிகரித்து வரும் மக்கள்தொகை வளர்ச்சிப் போக்கில் சரிவு ஏற்படும் (2011ஆம் ஆண்டினை விட).
  • உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் முன்னணி இடம் பெற்றதுடன் வட மாநிலங்கள் (மக்கள் தொகை அதிகரிப்பு வளர்ச்சிப் போக்கில் 33 சதவீத பங்கைக் கொண்டுள்ளன) மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்கின்றன.
  • வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்கள் மொத்த மக்கள்தொகையில் 52 சதவீதப் பங்கைக் கொண்டிருக்கும் (2011 ஆம் ஆண்டில் 51 சதவீதம்).
  • ஒன்றியப் பிரதேசங்களைத் தவிர, கோவா மற்றும் கேரளா ஆகியவை அதிக அளவில் நகர மயமாக்கப் பட்டுள்ளன.
  • பெரிய மாநிலங்களில், 54 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதுடன் தமிழ்நாடு அதிகளவில் நகரமயமாக்கப்பட்ட ஒரு மாநிலமாகத் தொடர்கிறது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (48.8 சதவீதம்) உள்ளது.  
  • இமாச்சலப் பிரதேசம் (10.3 சதவீதம்), அதைத் தொடர்ந்து பீகார் (12.4 சதவீதம்), அஸ்ஸாம் (15.7 சதவீதம்), மற்றும் ஒரிசா (19.0%) ஆகியவை இந்தத் தரவரிசையில் கீழ் மட்டங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்