SBI சேமிப்பு வங்கிக் கணக்குகளிள் குறைந்தபட்ச இருப்புத் தொகை நீக்கம்
March 12 , 2020 1722 days 585 0
சேமிப்புக் கணக்குகளுக்கான சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கியுள்ளதாக இந்திய பாரத வங்கி (State Bank of India - SBI) அறிவித்துள்ளது.
தற்போது பெரு நகரங்கள், நகர்ப்புறப் பகுதிகள் (நகரை ஒட்டிய பகுதிகள்) மற்றும் கிராமப் புறங்களில் SBI சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் முறையே ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் ரூ. 1,000 என்ற இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டும்.
மேலும் இந்த வங்கியானது சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்குமான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் சீரமைத்துள்ளது.
முன்னதாக, ஒரு லட்சத்துக்கும் குறைவான இருப்புத் தொகையைக் கொண்ட சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3.25 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்புத் தொகையைக் கொண்ட சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 3 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெற்று வந்தனர்.