பாரத ஸ்டேட் வங்கியானது (SBI – State Bank of India) தனது மங்களூரின் லால்பாக் கிளையில் ’SBI செல்வ வள மையம்’ என்ற மையத்தை திறந்ததின் மூலம் தனது வளமான வணிக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செல்வ வளமையமானது SBI தலைவர் ரஜ்னீஷ் குமாரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம், அதன் வாடிக்கையாளர்களுக்கு விரிவான வளமான வணிக சேவைகளை அறிமுகப்படுத்தும் நாட்டின் முதல் பொதுத்துறை வங்கியாக SBI மாறியுள்ளது.
வங்கியானது தனது வளமான வணிக சேவையை ‘SBI Wealth’ என்று மறு பெயரிட்டுள்ளது.
இது மக்கள்தொடர்பு மேலாளர்களின் பிரத்தியேக குழு மூலம் உயர்தர நிகர மதிப்புடைய வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த முறையில் தனிப் பயனாக்கப்பட்ட வங்கி மற்றும் முதலீட்டு சேவைகளை வழங்குகிறது.