மிகப் பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான இமயம் என்ற V.அண்ணாமலை, தமிழ்நாடு மாநிலப் பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
S.செல்வகுமார் (கோவை மாவட்டம்), S.ஆனந்த ராஜா (தஞ்சாவூர்), M.பொன் தௌஸ் (நீலகிரி) மற்றும் P.இளஞ்செழியன் (திருநெல்வேலி) ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளஞ்செழியன் இந்த ஆணையத்தில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
நமது மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு SC / ST சட்டத்தின் கீழான தமிழ்நாடு மாநில ஆணையத்தின் விதிகளின் கீழ் இந்த ஆணையத்தை அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான S. தமிழ்வாணனை இந்த ஆணையத்தின் தலைவராக அரசு நியமித்துள்ளது.
1955 ஆம் ஆண்டு உரிமையியல் சார் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழான உரிமைகளின் மீறல்களுக்குப் பொதுத் தீர்வு காண்பதே இதன் முக்கியப் பணியாகும்.
இது இத்தகைய உரிமை மீறல்களைத் தடுப்பதில் ஓர் அரசாங்க ஊழியரின் அலட்சிய நடவடிக்கை குறித்தும் விசாரணை மேற்கொள்கிறது.