1989 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன் கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் அதன் 1995 ஆம் ஆண்டு விதிகளின் கீழ் அறிவு சார் சொத்து இழப்பு இழப்பீடு குறித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1995 ஆம் ஆண்டு விதிகளின் 12(1)வது விதியினை உள்ளடக்கிய, வன்கொடுமைச் சட்டத்தின் 15Aவது பிரிவின் (11)(d) உட்பிரிவின் கீழ், சேதப்படுத்தப் படும் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய ஒரு இழப்பீட்டை மிகவும் நியாயமான முறையில் மதிப்பிடக் கோரி மனுதாரர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தினை அணுகினர்.
"சொத்து" என்ற சொல் ஆனது, தரவு, மின்னணுப் பொருட்கள் மற்றும் அறிவுசார் உரிமைகள், அவை புலனாகும் அல்லது புலனாகாதச் சொத்துக்கள் என்ற வகையில், அறிவுசார் சொத்துக்களையும் உள்ளடக்கியதாக மிகவும் பரந்த அளவில் விளக்கப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி காப்புரிமைகள், பதிப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகள் ஆகியன அமைப்பு ரீதியாக இல்லாவிட்டாலும், அவையும் சொத்துகளே ஆகும். என்பதோடு 1989 ஆம் ஆண்டு SC/ST சட்டத்தின் கீழ் இழப்பீட்டிற்கு மதிப்பிடப்படக் கூடியவை.
மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இச்சட்டத்தின் 8வது பிரிவானது, குற்றம் சாட்டப் பட்டவர்களே தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் முக்கியப் பொறுப்பை இடமாற்றுகின்ற வகையில் தலைகீழ் நிரூபண/ ஆதார சமர்ப்பிப்புப் பொறுப்பினை கொண்டுள்ளது.