TNPSC Thervupettagam

SC/ST மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றம் – தமிழ்நாடு

February 13 , 2025 9 days 73 0
  • 2020 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்டச் சாதியினர் / பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
  • பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிராக 2020 ஆம் ஆண்டில் 1,274 குற்றங்களும், 2021 ஆம் ஆண்டில் 1,377 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டன.
  • 2022 ஆம் ஆண்டில், பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தன, இதன் விளைவாக 1,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
  • 2020 ஆம் ஆண்டில் 23 ஆக பதிவான வழக்குகள் ஆனது, 2021 ஆம் ஆண்டில் 30 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 67 ஆகவும் அதிகரித்தது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தமிழகத்தில் பதிவானது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவினைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆனது 2020 ஆம் ஆண்டில் 116 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 123 ஆகவும் மற்றும் 2022 ஆம் ஆண்டில் 166 ஆகவும் பதிவாகின.
  • பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆனது, 2020 ஆம் ஆண்டில் 3 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 6 ஆகவும் மற்றும் 2022 ஆம் ஆண்டில் 14 ஆகவும் பதிவாகியுள்ளன.
  • அனைத்து மாநிலங்களிலும் SC மற்றும் ST பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, இதில் 15,368 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளதோடு இந்த மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டில் 12,714 வழக்குகளும் 2021 ஆம் ஆண்டில் 13,146 வழக்குகளும் பதிவானது.
  • குறைகளைத் தீர்ப்பதற்காகவும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி 14566 என்ற கட்டணமில்லா எண்ணைக் கொண்ட வன்கொடுமைகளுக்கு எதிரான தேசிய உதவி எண் (NHAA) ஆனது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்