TNPSC Thervupettagam

SCO அமைப்பின் தலைமை வழக்குரைஞர்களின் 18வது சந்திப்பு

October 25 , 2020 1403 days 399 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மீது தலைமை வழக்குரைஞர்களின் 18வது சந்திப்பானது காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதில் கலந்து கொண்டார்.
  • இந்தச் சந்திப்பின் போது, அனைத்து வழக்குரைஞர்களும் ஊழலைத் தடுத்தல் மற்றும் எதிர்த்துப் போராடுதல், பரஸ்பர சட்ட உதவி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டங்களின் பரிமாற்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர்.
  • இந்தியா 2021 ஆம் ஆண்டில்  SCO  (Shanghai Cooperation Organization) அமைப்பின் தலைமை வழக்குரைஞர்கள் மாநாட்டை நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்