SCO அமைப்பின் புதியப் பேச்சுவார்த்தை சார்ந்தப் பங்குதாரர் நாடு
April 12 , 2023 595 days 257 0
சவூதி அரேபியா நாடானது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) "பேச்சு வார்த்தை சார்ந்த ஒரு பங்குதாரர் நாடாக" இணைவதற்கான முடிவினை அங்கீகரித்து உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட யூரேசியா முழுவதும் உள்ள நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சார்ந்த கூட்டணி ஆகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தற்போது இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் அடங்கும்.
ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர் அந்தஸ்து கொண்ட நாடுகளாகும்.
ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தற்போது பேச்சுவார்த்தை சார்ந்தப் பங்குதாரர் நாடுகளாக உள்ளன.