TNPSC Thervupettagam
June 16 , 2019 1895 days 1035 0
  • கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO - Shanghai Cooperation Organisation) மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
  • தேர்தலுக்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்ற பின்பு இவருடைய முதலாவது பன்னாட்டுப் பங்கெடுப்பு இதுவாகும்.
  • அவர் SCO-ன் பிராந்தியத் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் கீழ் (Regional Anti-Terrorist Structure - RATS) சர்வதேசத் தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
SCO
  • SCO என்பது அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு நிரந்தர சர்வதேச அமைப்பாகும்.
  • இது ஒரு யுரேசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டிணைவாகும்.
  • இது 2001 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு ஷாங்காய் 5 என்ற அமைப்பாக இது செயல்பட்டது.
  • SCO-ன் முதன்மையான முடிவெடுக்கும் அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களைக் கொண்ட குழுவாகும்.
  • இது 8 நிரந்தர உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  • SCO-ல் பார்வையாளர் நாடுகளாக ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்