TNPSC Thervupettagam

SCO-ன் இரண்டாவது வெகுஜன ஊடகக் கூட்டம்

June 2 , 2019 1909 days 651 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organization) இரண்டாவது வெகுஜன ஊடகக் கூட்டம் பிஷ்கெக்கில் (கிர்கிஸ்தானின் தலைநகரம்) நடத்தப்பட்டது.
  • SCO உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெகுஜன ஊடக அமைப்புகளுக்கிடையே கூட்டிணைவுகளை வெற்றிகரமாக ஏற்படுத்துவதற்கு வலியுறுத்தும் “ஊடகக் கூட்டத்தின் தீர்மானத்தை” அதன் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன.
  • இந்தியாவின் சார்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையிலிருந்து ஒரு பிரதிநிதி இந்த சர்வதேசக் கூட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்.
SCO மற்றும் SCO வெகுஜன ஊடகக் கூட்டம்
  • SCO என்பது யுரேசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டிணைவாகும்.
  • இது 2001 ஆம் ஆண்டு ஜுன் 15 அன்று சீனாவின் ஷாங்காயில் தொடங்கப்பட்டது.
  • இது சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
  • தற்பொழுது இது 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு ஜுன் 01 அன்று சீனாவின் பெய்ஜிங்கில் முதலாவது SCO ஊடக மாநாடு நடத்தப்பட்டது.
  • இது SCO அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுக்கிடையே வெகுஜன ஊடகத் துறையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்