TNPSC Thervupettagam

SCO கலாச்சார அமைச்சர்களின் 15–வது கூட்டம்

May 23 , 2018 2282 days 659 0
  • சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற SCO (Shanghai Cooperation Organization - SCO) கலாச்சார அமைச்சர்களின் 15–வது கூட்டத்தில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சரும் (பொறுப்பு), மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு இணை அமைச்சருமான மகேஷ் சர்மா பங்கேற்றார்.
  • ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் உறுப்பினர் நாடுகளின் கலாச்சார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

  • SCO நாடுகள் உட்பட மற்ற நாடுகளுடன் தீவிரமாக கலாச்சார கூட்டுறவை இந்தியா மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் இந்தியாவின் முயற்சிகளை (Initiatives) காட்சிப்படுத்தும்.
  • SCO உறுப்பினர் நாடுகளின் தலைவர்களின் மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானாவில் நடைபெற்ற போது தான் ஜூன் 9, 2017 அன்று இந்தியா SCO-வின் முழுநேர உறுப்பினராக உருவெடுத்தது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்