சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற SCO (Shanghai Cooperation Organization - SCO) கலாச்சார அமைச்சர்களின் 15–வது கூட்டத்தில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சரும் (பொறுப்பு), மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு இணை அமைச்சருமான மகேஷ் சர்மா பங்கேற்றார்.
ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் உறுப்பினர் நாடுகளின் கலாச்சார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
SCO நாடுகள் உட்பட மற்ற நாடுகளுடன் தீவிரமாக கலாச்சார கூட்டுறவை இந்தியா மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் இந்தியாவின் முயற்சிகளை (Initiatives) காட்சிப்படுத்தும்.
SCO உறுப்பினர் நாடுகளின் தலைவர்களின் மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானாவில் நடைபெற்ற போது தான் ஜூன் 9, 2017 அன்று இந்தியா SCO-வின் முழுநேர உறுப்பினராக உருவெடுத்தது.