TNPSC Thervupettagam

SCO மண்டல தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு மாநாடு

May 25 , 2018 2376 days 710 0
  • பாகிஸ்தான் முதல் முறையாக தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு சட்ட வல்லுநர்களின் (Regional Anti-Terrorist Structure - RATS) மாநாட்டை இஸ்லாமாபாத்தில் நடத்தியது.
  • பாகிஸ்தான், இந்தியாவுடன் சேர்த்து 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் (Shanghai Cooperation Organisation - SCO) நிரந்தர உறுப்பினரான பிறகு பாகிஸ்தானில் நடக்கும் முதல் SCO மாநாடு இதுவாகும்.

  • இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சி நிரலானது, SCO மண்டலத்தின் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விவாதிப்பது ஆகும்.
  • மண்டல தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பானது (RATS) SCOவின் நிரந்தர உறுப்பு அமைப்பாகும்.
  • RATS ன் தலைமையகம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட்டில் அமைந்துள்ளது. RATSன் தலைவர் மூன்று ஆண்டு காலம் பதவிக் காலம் உடையவராவார். ஒவ்வொரு உறுப்பினர் நாடும், RATSக்கு நிரந்தர பிரதிநிதியை அனுப்புகின்றது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்