பாகிஸ்தான் முதல் முறையாக தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு சட்ட வல்லுநர்களின் (Regional Anti-Terrorist Structure - RATS) மாநாட்டை இஸ்லாமாபாத்தில் நடத்தியது.
பாகிஸ்தான், இந்தியாவுடன் சேர்த்து 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் (Shanghai Cooperation Organisation - SCO) நிரந்தர உறுப்பினரான பிறகு பாகிஸ்தானில் நடக்கும் முதல் SCO மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சி நிரலானது, SCO மண்டலத்தின் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விவாதிப்பது ஆகும்.
மண்டல தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பானது (RATS) SCOவின் நிரந்தர உறுப்பு அமைப்பாகும்.
RATS ன் தலைமையகம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட்டில் அமைந்துள்ளது. RATSன் தலைவர் மூன்று ஆண்டு காலம் பதவிக் காலம் உடையவராவார். ஒவ்வொரு உறுப்பினர் நாடும், RATSக்கு நிரந்தர பிரதிநிதியை அனுப்புகின்றது.