TNPSC Thervupettagam
June 12 , 2018 2262 days 844 0
  • சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் 18-வது மாநாடு குயிங்டோ தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு நிறைவடைந்துள்ளது.
  • இத்தீர்மானம் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • SCO (Shanghai Cooperation Organization) குழுவில் முழு உறுப்பினர்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இது முதல் மாநாடாகும்.
  • தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை தடுத்திட மூன்றாண்டு காலத்திட்ட நடவடிக்கையை அமல்படுத்திட குயிங்டோ தீர்மானம் அழைப்பு விடுக்கின்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

  • SCO சீனாவின் பெய்ஜிங்கை தலைமையகமாகக் கொண்ட பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட யூரேஸிய அமைப்பாகும்.
  • SCO அமைப்பை ஏற்படுத்துவதற்கான தீர்மானம் ஜூன் மாதம் 2001-ம் ஆண்டு ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நிறுவனர் நாடுகளால் கையெழுத்திடப்பட்டு சீனாவின் பெய்ஜிங்கில் ஏற்படுத்தப்பட்டது.
  • ஜூன் மாதம் 2017-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் SCO-வில் உறுப்பினர்களாக்கப்பட்டனர்.
  • ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் தற்சமயம் இந்த SCO அமைப்பில் பார்வையாளர்களாக உள்ளன.
  • இலங்கை, துருக்கி, அசர்பைஜான், அர்மேனியா, கம்போடியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கான பங்களிப்பாளர்களாக SCO-வில் உள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்