TNPSC Thervupettagam

SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டம்

April 4 , 2018 2430 days 8064 0
  • ST/SC (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989-ஐ தவறாக பயன்படுத்தப்படுதலைத் தடுக்கவும், நேர்மையான அதிகாரிகளைக் காக்கவும் உச்ச நீதிமன்றம் பின்வரும் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
    • SC/ST சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை என்பது கட்டாயமல்ல மற்றும் உடனடிக் கைது (Automatic arrest) என்பது நீக்கப்படுகிறது.
    • இது, அரசு அதிகாரிகள், தனிநபர்கள் ஆகியோரை இச்சட்டத்தின் கீழான நியாயமற்ற கைதிலிருந்து பாதுகாக்கிறது.
    • அரசு அதிகாரியை இச்சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் அதற்கு மேலான நிலையில் உள்ளவரைக் கொண்டு முதல்நிலை விசாரணை நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989ன் கீழ், வழக்குகளில் உடனடிக் கைதைத் தடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது.
  • SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டம்

  • இச்சட்டம், SC/ST பிரிவினருக்கு எதிரான வன்முறைகளை மட்டும் வரையறுக்காமல் அடிமட்ட நிலையில் உள்ள இப்பிரிவினை பாதுகாக்க பல்வேறு விதிகள், வரைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சட்டமாகும்.
  • இச்சட்டத்தின் கூறுகளுள் ஒன்று, SCs / STs தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கும் அரசு அதிகாரிகள் (SC/ST அல்லாதோர்) 6 மாதம் முதல் 1 வருடம் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்படுவர் என கூறுகிறது.
  • இச்சட்டத்தை செயலாக்கம் பெறச் செய்யும் அமைப்பு சமூக நீதி அமைச்சகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்