தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமான ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம் (SCTIMST - Sree Chitra Tirunal Institute for Medical Science) ஒரு நோயறிதல் கருவியை உருவாக்கி உள்ளது.
தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதித் தொடர்வினை (Reverse transcription polymerase chain reaction) சோதனைக் கருவிகள் ஒரு சோதனை செய்ய எடுக்கும் நேரத்தில் பாதியைக் கொண்டே இது மாதிரிகளை ஆய்வு செய்கிறது.
இந்தச் சோதனைக் கருவியானது வைரஸின் N மரபணுவை அடையாளம் காண RT-LAMP (Reverse Transcriptase Loop Mediated Isothermal Amplification technique) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இதன் விரைவுத்தன்மை, எளிமை, உணர்திறன் மற்றும் தனித்துவத்தின் மூலம், இந்தத் தொழில்நுட்பம் தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதித் தொடர்வினை சோதனைக் கருவிகளுக்குப் பதிலாக பயன்படுத்தப்பட இருக்கின்றது.