TNPSC Thervupettagam

SCTIMST தயாரித்த சோதனைக் கருவி

April 20 , 2020 1731 days 749 0
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமான ஸ்ரீ சித்திரத்  திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம் (SCTIMST - Sree Chitra Tirunal Institute for Medical Science) ஒரு நோயறிதல் கருவியை உருவாக்கி உள்ளது.
  • தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதித் தொடர்வினை (Reverse transcription polymerase chain reaction) சோதனைக் கருவிகள் ஒரு சோதனை செய்ய எடுக்கும் நேரத்தில் பாதியைக் கொண்டே இது மாதிரிகளை  ஆய்வு செய்கிறது.
  • இந்தச் சோதனைக் கருவியானது வைரஸின் N மரபணுவை அடையாளம் காண RT-LAMP (Reverse Transcriptase Loop Mediated Isothermal Amplification technique) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • இதன் விரைவுத்தன்மை, எளிமை, உணர்திறன் மற்றும் தனித்துவத்தின் மூலம், இந்தத் தொழில்நுட்பம் தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதித் தொடர்வினை சோதனைக் கருவிகளுக்குப் பதிலாக பயன்படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்