இந்திய நடிகை தியா மிர்சா மற்றும் அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் மா ஆகியோர் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரசினால் ஐ.நா.வின் சிறப்புமிகு நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG - Sustainable Development Goals) புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
SDG தூதுவர்கள் விழிப்புணர்வை அதிகரித்தல், உயர்ந்த இலட்சியத்தை ஊக்குவித்தல், உலகளாவிய அரசியல் விருப்பத்தை உறுதிப்படுத்துதல், SDG-ஐ அடைவதற்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்வேறு நாடுகளிலிருந்து மொத்தம் 17 தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.