SDG 7 இலக்குகளைக் கண்காணித்தல்: ஆற்றல் முன்னேற்ற அறிக்கை 2024
June 18 , 2024 158 days 245 0
இது சர்வதேச எரிசக்தி முகமை (IEA), ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் பிரிவு (UNSD), உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமையினால் (IRENA) தயாரிக்கப் பட்டது.
உலக மக்கள்தொகையில் 91 சதவீதம் பேர் 2022 ஆம் ஆண்டில் மின்சார வசதியினைப் பெற்றதாக இந்த அறிக்கைக் கண்டறிந்துள்ளது.
மேலும், 685 மில்லியன் மக்கள் இன்றும் மின்சார வசதிக்கான அணுகல் இல்லாமல் இருந்தனர் என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டினை விட 10 மில்லியன் அதிகமாகும்.
இதே போல், 2022 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் சுமார் 74 சதவீதத்தினர் தூய்மையான சமையல் எரிபொருட்களுக்கான அணுகலைப் பெற்றிருந்தனர்.
சுமார் 2.1 பில்லியன் மக்கள் இன்னும் மாசினை ஏற்படுத்தும் எரிபொருளையே சார்ந்து உள்ளனர் என்ற வகையில் 2030 ஆம் ஆண்டிற்குள் இதன் பயன்பாட்டுக் குறைப்பில் ஓரளவு முன்னேற்றம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் உலகளவிலான மொத்த இறுதி ஆற்றல் நுகர்வில் 18.7% புதுப்பிக்கத் தக்க ஆற்றல் ஆகும்.
இது 2015 ஆம் ஆண்டில் 16.7 சதவீதமாக இருந்த அளவை விட சற்று அதிகமாக உள்ளது என்ற நிலையில் மேலும் உலக நாடுகளானது 2030 ஆம் ஆண்டிற்குள் ஆற்றல் திறனை இரட்டிப்பாக்கும் போக்கின் பாதையில் இல்லை.
இது 2021 ஆம் ஆண்டில் 0.8 சதவீதம் மட்டுமே மேம்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் தூய்மையான ஆற்றலுக்கு ஆதரவாக வழங்கப் பட்ட சர்வதேசப் பொது நிதி வழங்கீடுகள் 2022 ஆம் ஆண்டில் சுமார் 15.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தன.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 25% அதிகமாகும்.
80% நிதி வழங்கீடுகள் வெறும் 25 நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.