TNPSC Thervupettagam

SDG 7 இலக்குகளைக் கண்காணித்தல்: ஆற்றல் முன்னேற்ற அறிக்கை 2024

June 18 , 2024 12 days 85 0
  • இது சர்வதேச எரிசக்தி முகமை (IEA), ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் பிரிவு (UNSD), உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமையினால் (IRENA) தயாரிக்கப் பட்டது.
  • உலக மக்கள்தொகையில் 91 சதவீதம் பேர் 2022 ஆம் ஆண்டில் மின்சார வசதியினைப் பெற்றதாக இந்த அறிக்கைக் கண்டறிந்துள்ளது.
  • மேலும், 685 மில்லியன் மக்கள் இன்றும் மின்சார வசதிக்கான அணுகல் இல்லாமல் இருந்தனர் என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டினை விட 10 மில்லியன் அதிகமாகும்.
  • இதே போல், 2022 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் சுமார் 74 சதவீதத்தினர் தூய்மையான சமையல் எரிபொருட்களுக்கான அணுகலைப் பெற்றிருந்தனர்.
  • சுமார் 2.1 பில்லியன் மக்கள் இன்னும் மாசினை ஏற்படுத்தும் எரிபொருளையே சார்ந்து உள்ளனர் என்ற வகையில் 2030 ஆம் ஆண்டிற்குள் இதன் பயன்பாட்டுக் குறைப்பில் ஓரளவு முன்னேற்றம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளவிலான மொத்த இறுதி ஆற்றல் நுகர்வில் 18.7% புதுப்பிக்கத் தக்க ஆற்றல் ஆகும்.
  • இது 2015 ஆம் ஆண்டில் 16.7 சதவீதமாக இருந்த அளவை விட சற்று அதிகமாக உள்ளது என்ற நிலையில் மேலும் உலக நாடுகளானது 2030 ஆம் ஆண்டிற்குள் ஆற்றல் திறனை இரட்டிப்பாக்கும் போக்கின் பாதையில் இல்லை.
  • இது 2021 ஆம் ஆண்டில் 0.8 சதவீதம் மட்டுமே மேம்பட்டுள்ளது.
  • வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் தூய்மையான ஆற்றலுக்கு ஆதரவாக வழங்கப் பட்ட சர்வதேசப் பொது நிதி வழங்கீடுகள் 2022 ஆம் ஆண்டில் சுமார் 15.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தன.
  • 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 25% அதிகமாகும்.
  • 80% நிதி வழங்கீடுகள் வெறும் 25 நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்