TNPSC Thervupettagam

SDG இந்தியா குறியீடு 2023-2024

July 15 , 2024 3 days 243 0
  • நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய 2023-2024 ஆம் ஆண்டு இந்திய அளவிலான SDG (நிலையான மேம்பாட்டு இலக்குகள்) பூர்த்திக் குறியீட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் 66 ஆக இருந்த தமிழக மாநிலத்தின் கூட்டு மதிப்பெண்ணானது சமீபத்தியக் குறியீட்டில் 78 ஆக உயர்ந்துள்ளதையடுத்து, இந்தக் குறியீட்டில் தமிழக மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2023-2024 ஆம் ஆண்டில் மருத்துவமனையில் பிரசவிக்கும் குழந்தைகள் விகிதம் ஆனது 97.18% என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
  • மாநிலத்தின் புவியியல் பகுதியில் சுமார் 25% பகுதிகளைக் காடுகளாக மாற்றியதை அடுத்து தமிழக மாநிலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து உள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத்-PMJAY திட்டத்தின் மூலமாக, சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுகாதாரக் காப்பீட்டு பலன்களை தமிழ்நாடு வழங்கியுள்ளது.
  • ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், 11 மில்லியன் கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்