நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய 2023-2024 ஆம் ஆண்டு இந்திய அளவிலான SDG (நிலையான மேம்பாட்டு இலக்குகள்) பூர்த்திக் குறியீட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
2018 ஆம் ஆண்டில் 66 ஆக இருந்த தமிழக மாநிலத்தின் கூட்டு மதிப்பெண்ணானது சமீபத்தியக் குறியீட்டில் 78 ஆக உயர்ந்துள்ளதையடுத்து, இந்தக் குறியீட்டில் தமிழக மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
2023-2024 ஆம் ஆண்டில் மருத்துவமனையில் பிரசவிக்கும் குழந்தைகள் விகிதம் ஆனது 97.18% என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் புவியியல் பகுதியில் சுமார் 25% பகுதிகளைக் காடுகளாக மாற்றியதை அடுத்து தமிழக மாநிலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து உள்ளது.
ஆயுஷ்மான் பாரத்-PMJAY திட்டத்தின் மூலமாக, சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுகாதாரக் காப்பீட்டு பலன்களை தமிழ்நாடு வழங்கியுள்ளது.
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், 11 மில்லியன் கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கியுள்ளது.