TNPSC Thervupettagam

SDGக்கான 2020 ஆண்டின் இளம் தலைவர்களின் மீதான ஐ.நா.வின் பட்டியல்

September 21 , 2020 1406 days 580 0
  • நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான 2020 ஆம் ஆண்டின் இளம் தலைவர்களின் பட்டியலில் ஐக்கிய நாடுகள் சபையானது 18 அகவை நிரம்பிய ஒரு இந்திய இளைஞரின் பெயரை வெளியிட்டுள்ளது.
  • டெல்லியைச் சேர்ந்த இந்த  இளைஞர் கிளாஸ்2சாண்டின் என்ற நிறுவனத்தின் (Glass2Sand) நிறுவனர் ஆவார்.
  • இது கண்ணாடியை மணலாக மாற்றும் வகையில் கழிவுகளற்ற ஒரூ சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
  • இந்த அமைப்பானது தேசிய தலைநகரத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் கண்ணாடி குறித்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறது.
  • இவரின் முன்னெடுப்பானது வெற்றுக் கண்ணாடி பாட்டில்கள் நிலப்பரப்பில் குவிக்கப் படுவதைத் தடுத்துள்ளது.

நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான இளம் தலைவர்கள்

  • நிலையான வளர்ச்சி இலக்கு மீதான முன்முயற்சிக்கான இளம் தலைவர்கள் இரண்டாண்டிற்கொரு முறை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
  • உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பும் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை எடுக்கும் இளைஞர்களுக்கு இது ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் மிக உயர்ந்த அங்கீகாரம் கொண்ட  ஒரு வாய்ப்பாக கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்