இஸ்ரோ விண்வெளி நிறுவனமானது, சமீபத்தில் பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தின் (SE2000) செயல் திறன் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த சோதனையானது, முக்கியக் கூறு சோதனை (PHTA) என்றும், ஒரு பகுதியளவு மீக் குளிர் நிலையிலான இயந்திரங்களை உருவாக்கச் செய்வதற்கான முதல் வன்பொருள் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது.
மீக்குளிர் நிலையிலான இயந்திரங்கள் திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.
அதே சமயம் ஒரு பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரங்கள் திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் கலவையைப் பயன்படுத்துகிறது என்பதோடு இதில் மண்ணெண்ணெய் எளிதில் சேமிக்க இயலும்.
இந்த எரிபொருள் கலவையானது மிக அதிக அடர்த்தி கொண்ட கணத்தாக்கு விசை, குறைந்த நச்சுத்தன்மை (சேமிப்பு அம்சம் ரீதியாக) மற்றும் செலவு குறைந்த எரி பொருளுக்கான வாய்ப்பு போன்ற நன்மைகளை வழங்குகிறது.