மெட்டா நிறுவனம் தனது SeamlessM4T எனப் படுகின்ற புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
இது கிட்டத்தட்ட 100 வெவ்வேறு மொழிகளின் வாய்மொழி உரைகளை அடையாளம் காணுதல் மற்றும் வாய்மொழியிலிருந்து உரை மொழிபெயர்ப்பு ஆகிய திறன் கொண்ட பல்மாதிரி செயற்கை நுண்ணறிவு மாதிரியாகும்.
SeamlessM4T என்பது முதல் வகையான அனைத்து அம்சங்கள் அடங்கிய பன்மொழி பல்மாதிரி செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மாதிரி ஆகும்.
இந்த ஒற்றை மாதிரியானது, வழங்கப்பட்டப் பணியைப் பொருத்து 100 மொழிகள் வரை வாய்மொழியிலிருந்து உரை மொழிபெயர்ப்பு, வாய்மொழியிலிருந்து வாய்மொழி மொழி பெயர்ப்பு, உரையிலிருந்து வாய்மொழியாக மொழிபெயர்ப்பு மற்றும் உரையிலிருந்து உரையாக மொழிபெயர்ப்பு ஆகியவற்றினை மேற்கொள்ளும் திறன் கொண்டது.