இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம்(Securities and Exchange Board of India - SEBI), விற்பனைப் பொருள் தருவிப்புகளின் பரிமாற்றத்தில் (Commodity Derivatives Exchanges) அல்காரிதம் முறையிலான வர்த்தக வரன்முறைகளைத் தளர்த்தியுள்ளது.
செபி தற்போதை வர்த்தக எல்லையான ஒரு நிமிடத்திற்கு 20 முறைமைகள் (Orders) என்பதிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 100 (Orders) முறைமைகள் வரை உயர்த்தியுள்ளது.
பங்குச்சந்தைகளின் அறிக்கைகள் மற்றும் செபியின் துணைக் குழுவினுடைய விற்பனைப்பொருள் தருவிப்புகளுக்கான ஆலோசனைக் குழுவின் கருத்துக்கள் ஆகியவற்றைப் பெற்று அவற்றின் அடிப்படையில் இந்த முடிவை செபி எடுத்துள்ளது.
செபி தன்னால் வழங்கப்படும் வர்த்தக எல்லையானது வர்த்தகங்களை கையாளும் தன்னுடைய திறனுக்குட்பட்டது என்பதை உறுதி செய்ய பங்குச் சந்தைகளை கேட்டுக்கொண்டுள்ளது.
அல்காரிதம் வர்த்தகம்
இது இந்தியாவில் 2009ல் தொடங்கப்பட்டது. நிதியியல் சந்தைகளில் அல்காரிதம் வர்த்தகம் என்பது, மேம்பட்ட கணித மாதிரிகளைப் பயன்படுத்தி, உருவாக்கப்படும் பரிவர்த்தனை முறைமைகளை (orders) குறிக்கிறது. இது வர்த்தகத்தின் தன்னிச்சையான செயலாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பொருள் பரிமாற்றத்தின் மீதான பரிவர்த்தனை முடிவுகளை உருவாக்குவதுடன் அவற்றை அதிகபட்ச வேகத்தில் செயலாக்கம் செய்வதற்காக இது கணிதவியல் மாதிரிகள் மற்றும் மென்பொருள் குறியீடுகளைப் பயன்படுத்துகிறது.
தற்போது, தேசியப் பங்குச்சந்தையில் அல்காரிதம் வர்த்தகம் அனைத்து வகையான வர்த்தகங்களிலும் 16%ஐ நெருங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இது ஜனவரி 2017 வரையில் 56% ஆக உள்ளது.