பெரு நிறுவன ஆளுகை (Corporate Governance) தொடர்பாக அமைக்கப்பட்ட உதய் கோட்டக் குழுவின் (Uday Kotak Committee) பெரும்பாலான பரிந்துரைகளினை ஏற்றதன் மூலம் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான (Securities and Exchange Board of India - SEBI) செபி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பெரு நிறுவன ஆளுகை விதிமுறைகளை இறுக்கியுள்ளது.
செபி அமைப்பானது இயக்குநராவதற்குரிய தகுதி வரன்முறைகளை (Eligibility Criteria) விரிவுபடுத்தியுள்ள வேளையில், ஒருவர் அதிகபட்சம் இயக்குநராவதற்குரிய எண்ணிக்கை வரம்பெல்லையை படிப்படியாக பத்திலிருந்து 7 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.
சந்தை மதிப்பில் முதல் 500 இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தலைவர் (Chairman) மற்றும் நிர்வாக இயக்குநர் (Administrative Director) மற்றும் தலைமைச் செயலதிகாரி (CEO-Chief Executive Officer) ஆகிய பதவிகளை பிரிக்க வேண்டும் என செபி கூறியுள்ளது.
மேலும் செபியானது தலைவர் (Chairman) மற்றும் நிர்வாக இயக்குநர் (Administrative Director) மற்றும் தலைமைச் செயலதிகாரி ஆகியோரது பணிகளையும் பிரிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.
பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் அதிக பட்சம் இயக்குனர்களாக 8 பேர் வரை இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
செபி அமைப்பானது நிறுவனங்களில் உள்ள தணிக்கைக் குழுவினுடைய (audit committee) செயல்பாத்திரங்களையும் (Roles), நியமனம் மற்றும் ஊதியக் குழு (Nomination and remuneration committee), மற்றும் இடர் மேலாண்மைக் குழுவினுடைய (risk management committee) செயல் பாத்திரங்களையும் மேம்படுத்தியுள்ளது.
செபி அமைப்பானது பங்குகள் (stocks) வருவிப்புப் பிரிவுகளில் (derivatives segment) சேர்க்கப்படுவதற்கான தகுதி வரன்முறைகளை திருத்தியமைத்துள்ளது. இத்தகு வகையில் கடைசி திருத்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
நிறுவனங்களின் அமைப்பை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டு கோட்டக் வங்கி தலைவர் உதய் கோட்டக் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய பரிந்துரையை வழங்கியது.
பரஸ்பர நிதிகள்
பரஸ்பர நிதிகளில் (Mutual funds - MFs) செபி அமைப்பானது ஒவ்வொரு பரஸ்பர நிதியின் மீது விதிக்கப்பட்ட செலவுகளுக்கான உச்ச வரம்பை (Cap for expenses charged for each scheme) குறைத்துள்ளது.
பரஸ்பர நிதிகளினுடைய தினசரி நிகர சொத்து மதிப்புகளின் (Daily net asset value) அதிகபட்ச வரம்பானது 20 புள்ளிகளிலிருந்து 5 புள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது பரஸ்பர நிதிகளில் நிகர சொத்து மதிப்புகள் (Marginally higher net asset value - NAV) சற்று அதிகம் வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும்.