இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது அதன் புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது.
இது அதன் 35வது ஸ்தாபன தினத்தின் போது வெளியிடப்பட்டது.
புதிய இலட்சினை என்பது, மூலதன உருவாக்கம் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தச் செய்வதற்கான இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கிறது.
இது கொள்கை உருவாக்கத்தில் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் ஆற்றலையும் ஒருங்கிணைக்கிறது.
1992 ஆம் ஆண்டில் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு சட்டப் பூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டன.