TNPSC Thervupettagam
March 30 , 2018 2285 days 1533 0
  • பெரு நிறுவன ஆளுகை (Corporate Governance) தொடர்பாக அமைக்கப்பட்ட உதய் கோட்டக் குழுவின் (Uday Kotak Committee) பெரும்பாலான பரிந்துரைகளினை ஏற்றதன் மூலம் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான  (Securities and Exchange Board of India - SEBI)  செபி,   பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பெரு நிறுவன ஆளுகை விதிமுறைகளை  இறுக்கியுள்ளது.
  • செபி அமைப்பானது இயக்குநராவதற்குரிய தகுதி வரன்முறைகளை (Eligibility Criteria) விரிவுபடுத்தியுள்ள வேளையில்,  ஒருவர் அதிகபட்சம் இயக்குநராவதற்குரிய எண்ணிக்கை   வரம்பெல்லையை படிப்படியாக  பத்திலிருந்து 7 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.

  • சந்தை மதிப்பில் முதல் 500 இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தலைவர் (Chairman) மற்றும் நிர்வாக இயக்குநர் (Administrative Director) மற்றும் தலைமைச் செயலதிகாரி  (CEO-Chief Executive Officer) ஆகிய பதவிகளை பிரிக்க வேண்டும் என செபி கூறியுள்ளது.
  • மேலும் செபியானது தலைவர் (Chairman) மற்றும் நிர்வாக இயக்குநர் (Administrative Director) மற்றும் தலைமைச் செயலதிகாரி  ஆகியோரது பணிகளையும் பிரிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.
  • பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் அதிக பட்சம் இயக்குனர்களாக 8 பேர் வரை இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
  • செபி அமைப்பானது நிறுவனங்களில் உள்ள தணிக்கைக் குழுவினுடைய (audit committee) செயல்பாத்திரங்களையும் (Roles), நியமனம் மற்றும் ஊதியக் குழு  (Nomination and remuneration committee), மற்றும் இடர் மேலாண்மைக் குழுவினுடைய (risk management committee) செயல் பாத்திரங்களையும்   மேம்படுத்தியுள்ளது.
  • செபி அமைப்பானது பங்குகள் (stocks) வருவிப்புப் பிரிவுகளில்   (derivatives segment) சேர்க்கப்படுவதற்கான தகுதி வரன்முறைகளை திருத்தியமைத்துள்ளது. இத்தகு வகையில் கடைசி திருத்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
  • நிறுவனங்களின் அமைப்பை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டு கோட்டக் வங்கி தலைவர் உதய் கோட்டக் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய பரிந்துரையை வழங்கியது.

பரஸ்பர நிதிகள்

  • பரஸ்பர நிதிகளில் (Mutual funds - MFs) செபி அமைப்பானது ஒவ்வொரு பரஸ்பர நிதியின் மீது விதிக்கப்பட்ட செலவுகளுக்கான உச்ச வரம்பை (Cap for expenses charged for each scheme) குறைத்துள்ளது.

  • பரஸ்பர நிதிகளினுடைய தினசரி நிகர சொத்து மதிப்புகளின் (Daily net asset value) அதிகபட்ச வரம்பானது 20 புள்ளிகளிலிருந்து 5 புள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இந்நடவடிக்கையானது பரஸ்பர நிதிகளில் நிகர சொத்து மதிப்புகள் (Marginally higher net asset value - NAV) சற்று அதிகம் வைத்துள்ள  முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்