TNPSC Thervupettagam
April 8 , 2018 2278 days 852 0
  • இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம்(Securities and Exchange Board of India - SEBI), விற்பனைப் பொருள் தருவிப்புகளின் பரிமாற்றத்தில் (Commodity Derivatives Exchanges) அல்காரிதம் முறையிலான வர்த்தக வரன்முறைகளைத் தளர்த்தியுள்ளது.
  • செபி தற்போதை வர்த்தக எல்லையான ஒரு நிமிடத்திற்கு 20 முறைமைகள் (Orders) என்பதிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 100 (Orders) முறைமைகள் வரை உயர்த்தியுள்ளது.
  • பங்குச்சந்தைகளின் அறிக்கைகள் மற்றும் செபியின் துணைக் குழுவினுடைய விற்பனைப்பொருள் தருவிப்புகளுக்கான ஆலோசனைக் குழுவின் கருத்துக்கள் ஆகியவற்றைப் பெற்று அவற்றின் அடிப்படையில் இந்த முடிவை செபி எடுத்துள்ளது.
  • செபி தன்னால் வழங்கப்படும் வர்த்தக எல்லையானது வர்த்தகங்களை கையாளும் தன்னுடைய திறனுக்குட்பட்டது என்பதை உறுதி செய்ய பங்குச் சந்தைகளை கேட்டுக்கொண்டுள்ளது.

அல்காரிதம் வர்த்தகம்

  • இது இந்தியாவில் 2009ல் தொடங்கப்பட்டது. நிதியியல் சந்தைகளில் அல்காரிதம் வர்த்தகம் என்பது, மேம்பட்ட கணித மாதிரிகளைப் பயன்படுத்தி, உருவாக்கப்படும் பரிவர்த்தனை முறைமைகளை (orders) குறிக்கிறது. இது வர்த்தகத்தின் தன்னிச்சையான செயலாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • பொருள் பரிமாற்றத்தின் மீதான பரிவர்த்தனை முடிவுகளை உருவாக்குவதுடன் அவற்றை அதிகபட்ச வேகத்தில் செயலாக்கம் செய்வதற்காக இது கணிதவியல் மாதிரிகள் மற்றும் மென்பொருள் குறியீடுகளைப் பயன்படுத்துகிறது.
  • தற்போது, தேசியப் பங்குச்சந்தையில் அல்காரிதம் வர்த்தகம் அனைத்து வகையான வர்த்தகங்களிலும் 16%ஐ நெருங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இது ஜனவரி 2017 வரையில் 56% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்