SECI நிறுவனத்திற்கு மினிரத்னா வகை-I அந்தஸ்து
April 18 , 2023
586 days
263
- அரசுக்குச் சொந்தமான இந்திய சூரியசக்திக் கழகமானது (SECI) மினிரத்னா வகை-I மத்தியப் பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
- இது 2011 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
- SECI என்பது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான ஒரு முதன்மை அமலாக்க நிறுவனமாகும்.
- மினிரத்னா- I அந்தஸ்தினைப் பெறுவதற்கான அளவுருக்கள்
- ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து இலாபம் ஈட்டியிருக்க வேண்டும்
- மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஓர் ஆண்டிலாவது, வரி செலுத்துவதற்கு முந்தைய நிலையிலான இலாபம் 30 கோடி அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும்
- மேலும் அது நேர்மறையான நிகர மதிப்பினைக் கொண்டிருக்க வேண்டும்.
Post Views:
263