சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மைண்ட்கிரோவ் நிறுவனமானது, இந்தியாவின் முதல் வணிகரீதியான உயர் செயல்திறன் கொண்ட RISC-V அடிப்படையிலான சில்லு (SoC) அமைப்பினை ‘Secure IoT’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
இது இந்திய அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM) நிறுவனத்தினைத் தங்கள் தயாரிப்புகளில் இந்திய சில்லு அமைப்பினை (SoC) பயன்படுத்த வழி வகுக்கும்.
இது உயர்தர அம்சங்களில் எந்தவித சமரசமும் செய்யாமல், அவர்களின் அதிக அம்சம் நிறைந்த சாதனங்களின் விலையைக் குறைக்க உதவும்.