TNPSC Thervupettagam

SEN நீட்டிப்புத் திறன் விருதுகள்

March 15 , 2019 1964 days 553 0
  • தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற யங் பிரசிடென்ட்ஸ் அமைப்பின் வருடாந்திர நிகழ்ச்சியில் அந்த அமைப்பால் கல்விக்கான சமூக நிறுவன அமைப்பு (SEN - Social Enterprise Network) நீட்டிப்புத் திறன் விருதானது திறன் மேம்பாட்டு நிறுவனமான சோனா யுக்திக்கு வழங்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டின் SEN விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய 55,000 நபர்களுக்கு (பொதுவாக பெண்களுக்கு) உதவியதற்காக சோனா யுக்தி நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலை சமூகங்களில் உள்ளவர்கள் உயர் திறன் வாய்ந்த பணிகளைப் பெறுவதற்காக இந்நிறுவனம் 55,000 தனி நபர்களுக்குப் பயிற்சியளித்தது.
  • இந்நிறுவனம் ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமப்புறப் பகுதிகளில் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்